ஹெரோயின் கடத்திய தாயும் மகனும் கைது!

கொழும்பு – பெட்டகன, பிதகோட்டே பகுதியில் 800 கிராம் ஹெரோயினுடன் 42 வயதுடைய தாயும், 19 வயதுடைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனந்தா மாவத்தையில் இருந்து குறித்த ஹெரோயினை கடத்தி சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களிடம் இருந்து 7 மில்லியன் பணமும், கார் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.