ஊரடங்கின் போது மீன் பிடிக்கச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் நோர்வூட் – காசல் நீர்தேக்கத்தில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று மாலை 4 மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது 3 நண்பர்களோடு மீன் பிடிக்கச் சென்ற இளைஞன் காசல்ரீ நீர்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்து போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞன் 29 வயதுடைய நோர்வூட் டங்கள் கீழ்பிரிவூ தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கே. சந்திரகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com