இலஞ்சம் பெற்ற போதைப் பொருள் பணியக கான்ஸ்டபிள் கைது!

நபர் ஒருவரிடமிருந்து 10,000 ரூபா கையூட்டலை பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் பணியக கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் – மாவனெல்லை, தெவனகல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு – கல்கிசை ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்த ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை, ரஜமாவத்தை பகுதியில் வைத்து நேற்று (11) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து 50 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள சைமா என்ற போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.