கொரோனா தாக்கிய பிரணாப் முகர்ஜி ஆபத்தான கட்டத்தில்!

கொரோனா தொற்றுக்கு உள்ளான இந்திய முன்னாள் பிரதமர் பிரணாப் முகர்ஜியின் (84-வயது) உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மூளை அறுவைச்சிகிச்சை ஒன்று இடம்பெற்ற மறுநாள் முகர்ஜிக்கு கொரோனா தொற்றும் உறுதியாகியிருந்தது.

இந்நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை என்றும் அவர் தொடர்ந்தும் வென்டிலேட்டரின் உதவியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.