மதத் தலைவர்களிடம் ஆசிபெறும் முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்று வருகின்றனர்.

இதற்கமைய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி உள்ளவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான இக்குழுவினர் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து ஆசீர் வாதம் பெற்றுள்ளனர்.

யாழ் ஆயர் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற இச் சந்திப்பில் ஆயரிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்ட முன்னணியினர் சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர்.

இதேவேளை நேற்றையதினம் நல்லை ஆதீனத்திற்குச் சென்ற மேற்படி முன்னணியின் குழுவினர் நல்லை ஆதீனக் குரு முதல்வரைச் சந்தித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டதுடன் சமகால நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.