அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை!

பொலிஸார் மீது கைக்குண்டு வீச முயன்ற பாதாள குழுத் தலைவர் அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரியான ‘சொல்தா’ என்று அறியப்படும் அசித ஹேமதிலக சற்றுமுன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொழும்பு – முல்லேரியாவில் வைத்து குறித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் அழகுகலை நிபுணர் சந்துனி அபேரத்ன, அவரது ஏழு வயது மகன் மற்றும் ஐந்து வயது மகள் உட்பட பலரை சுட்டுக் கொலை செய்த சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.