போலி நாணயத்தாளுடன் அச்சுவேலியில் பெண் கைது!

போலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி இலங்கை வங்கிக் கிளையில் இன்று (10 காலை ஆயிரம் ரூபாய் பெறுமதியிடப்பட்ட 3 போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த பெண்ணே கைது செய்யப்பட்டு அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

அந்த போலி நாணயத்தாள்கள் அவருக்கு எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com