மன்னாரில் கரையொதுங்கிய கடற் பன்றி


மன்னார் கடற்கரை ஆதாம் பாலத்திற்கு உட்பட்ட தேசிய வனப் பூங்கா பகுதியில் அருகிவரும் பாரிய மீன் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

கடற்பன்றி என பெயருடைய பாரிய மீனே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. கடற்கரையோர ரோந்துப்பணியில் ஈடுபட்ட கடற்படையினர் இதனை அவதானித்து குறித்த பகுதி வன ஜீவராசிகள் தினைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த திணைக்கள அதிகாரிகள் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து குறித்த மீனை பார்வையிட்டதுடன் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மீனின் ஒருபகுதி உணவுக்காக வேட்டையாடப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்ட நிலையில், குறித்த மீன் உடற்கூற்றுப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த கடற்பன்றி இனமானது தற்போது அருகிவரும் பாலூட்டி மீன் இனத்தைச் சேர்ந்தது என்பதுடன் கரையொதுங்கிய கடற்பன்றி 3.3 மீற்றர் நீளமானதும் சுமார் 700 கிலோ கிராம் எடை கொண்டதாகும்.

உடற்கூற்று பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் குறித்த அறிக்கையானது மன்னார் நீதவான் நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com