முடக்கப்பட்ட தாவடி விடுவிக்கப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் முதலாவதாக காெரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் தாவடி கிராமம் 21 நாட்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (13) காலை விடுவிக்கப்பட்டது.

இதன்படி தாவடிக் கிராமம் காெரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத் துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு, அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் கடந்த மார்ச் 22ம் திகதி காெரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டார். அன்றைய தினத்தில் இருந்து அவரது வதிவிடத்தைச் சூழவுள்ள கிராமம் சுகாதாரத் துறையினரால் இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் முடக்கப்பட்டது.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். அத்துடன் காெரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com