கோஹ்லி – தமன்னாவை கைது செய்யக் கோரி மனுத் தாக்கல்!

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றில் இன்று (01) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம் ஊடாக ஒன்லைன் ரம்மி விளையாடத் தூண்டியதாக தெரிவித்தே இவர்கள் மீது இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த விளம்பரங்களில் நடித்ததற்காக அவர்கள் இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு ஆகஸ்ட் 4ம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.