
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி இளைஞர்கள் ஊர் எல்லையில் தடையை ஏற்படுத்தி கண்காணிப்பு செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி ஊரில் இருந்து மக்களை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் செல்ல அனுமதிப்பதாகவும், வெளி இடங்களிலிருந்து வருபவர்களை முகக்கவசம் அணிந்திருந்தால் அல்லது மஞ்சள் தண்ணீர், டெற்றோல் போன்றவற்றால் கைகளை கழுவிய பின்னர் அனுமதிப்பதாகவும் – இளைஞர்களில் ஒருவர் தெரிவித்தார்.