வெள்ளவத்தையில் பெருமளவு ஹெரோயின் கைப்பற்றல்

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 23 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிரடி படையினரால் இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.