

முன்னாள் எம்பியும் பொது ஜன பெரமுன கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் இன்று (31) சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் அவருடன் சேர்த்து மேலும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்சன சில்வா மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயக்கொடி ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது கஹவத்தையில் நபர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.