யாழில் தொற்று உறுதியானவருக்கு கொழும்பில் தொற்று இல்லெயன்று முடிவு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்பட்ட நபருக்கு கொழும்பில் மீளவும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் யாழ் போதனாசாலை 7ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த நபருக்கு மீளவும் இரண்டு தடவைகள் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அந்த இரண்டு தடவைகளும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com