ஆயிரம் கிலோ மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது!

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் உலர்ந்த மஞ்சள் கட்டை மூடைகளுடன் நேற்று (29) இரவு கடற்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினர் விசேட ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது கடல் மார்க்கமாக மன்னார் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட 20 மூடைகளில் இருந்த ஆயிரம் கிலோ உலர்ந்த மஞ்சள் கட்டைகள் கைப்பற்றியதோடு, சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

மஞ்சள் மூடைகள் சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, சந்தேக நபர் கொரோனா அச்சம் காரணமாக சுகாதார திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.