
இயக்குனர் அட்லி விநியோகிக்கவுள்ள அடுத்த படத்தில் முக்கிய வேடமொன்றில் வளர்ந்து வரும் இலங்கை இளம் கலைஞரான விஜிதன் நடித்துள்ளார்.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி, ஓ2 மற்றும் பெஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ள புதிய படத்தை விநியோகம் செய்யவுள்ளார்.
இந்த படத்திற்கு “அந்தகாரம்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் போஸ்டரை அட்லி தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று (12) சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் இலங்கையைச் சேர்ந்த வளர்ந்து வரும் கலைஞர் விஜிதன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதுடன், படத்தின் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
விஜிதன் ஏற்கனவே சரபம் என்ற திரைப்படத்தில் துணை இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார். 2014ம் ஆண்டு வெளியாகிய இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
அந்தகாரம் படம் வெளியீட்டுக்கு காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் இயக்குனர் விக்னராஜாவின் அடுத்த படத்திலும் துணை இயக்குனராக பணியாற்றி வருகின்றார்.