ஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்து கொலை! மூவர் கைது

நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பதிவாகி உள்ளது.

பெரியமுல்ல பகுதியில் உள்ள பாலமொன்றிற்கு அருகில் கடந்த 13ம் திகதி இந்த குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தை சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நேற்று (15) நீதிவான் விசாரணைகள் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர். குழந்தையின் சடலம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அதற்கமைய, சம்பவம் தொடர்பில் குழந்தையின் சிறிய தந்தையான 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

குறித்த சந்தேக நபரை குழந்தையின் தாய் இரண்டாவதாக திருமணம் செய்தவர் என்று கூறப்படும் நிலையில் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக தாயும், பிரதான சந்தேக நபரின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.