பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல்; 13 பேர் கைது!

கொழும்பு – அங்குலானை பொலிஸ் நிலையம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

பொலிஸாரால் நபர் ஒருவரை சுட்டு கொன்றதை கண்டித்து இடம்பெற்ற போராட்டத்தின் போதே பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது.