மடுல்சீமை இளைஞன் குத்திக் கொலை; ஒருவருக்கு மறியல்!

பதுளை – பசறை, மடுல்சீமை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் களனி பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (15) இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

களனி – தலவத்தை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தொழில்புரிந்த இரண்டு இளைஞர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு இளைஞர்களும் ஹோட்டலின் அருகிலுள்ள அறையில் தங்கியிருந்த போதே நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞரை மஹர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 14 நாட்களுக்கு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.