அங்குலான பொலிஸ் நிலையம் முன் பதற்றம்; கண்ணீர்புகை தாக்குதல்!

கொழும்பு – அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இடையில் இன்று (16) மதியம் பதற்றமான சூழ்நிலையொன்று நிலவியது.

குறித்த பொலிஸ் நிலையம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டு விரட்டும் நவடிக்கையை மேற்கொண்டனர்.

அண்மையில் அங்குலான, லுனான பகுதியில் மீனவரான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்தும், சம்பவத்துடன் தொடர்பில் பிரதான சாட்சியாளர்கள் இருவர் இன்று காலை பொலிஸ் அதிகாரிகள் சிலரினால் ஜீப் ஒன்றில் அழைத்துச்செல்லப்பட்டதை எதிர்த்தும் பொலிஸ் நிலையத்தின் முன்னால் பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போதே இந்த பதற்ற நிலை ஏற்பட்டது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com