தாஜுதீன் கொலை; முக்கிய சந்தேக நபர் மரணம்! ஆபதான கட்டத்தில் இன்னொருவர்

ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான கொழும்பின் முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர உயிரிழந்துவிட்டார். மற்றைய சந்தேக நபரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்நாயக்கவினால் இன்று (16) கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய மேலதிக நீதிவான், வழக்கை நவம்பர் மாதம் 19ம் திகதி வரை ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் மரணமடைந்த மற்றும் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் நீதிமன்றுக்கு அறிக்கையிடுமாறு உத்தரவிட்டார்.

இவர்கள் மீது ஆதாரங்களை மறைத்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com