ஸ்ரீலங்காவில் கொரோனாவால்7வதாக உயிரிழந்தவரால் சாரதிக்கு ஏற்பட்ட நிலை!

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த ஏழாவது நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற சாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு – மவுண்ட்லவனியாவைச் சேர்ந்த உம்ரித் ஹாஜியார் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த ஏழாவது நபர் ஆவார்.

நேற்று மட்டும் இலங்கையில் 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கொழும்பைச் சேர்ந்த குறித்த சாரதியும் ஒருவராவார்.

இவர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவரது குடும்பத்திலுள்ள 6 பேரும் தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com