இலங்கைக்கு கடன் நீடிப்பு – சீன வங்கி பச்சைக்கொடி !

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (EXIM) இலங்கைக்கு அதன் கடனை செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளது.

அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் சீனா கூறியுள்ளது.

இலங்கைக்கு நிதி மற்றும் கடன் நிவாரணத்துடன் ஆதரவளிப்பதாக உறுதியளித்து இந்த மாத தொடக்கத்தில் இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் எழுதியது.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கு சீனாவின் ஆதரவும் இலங்கைக்கு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com