போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை ஜனாதிபதிடம்!

போராட்டக்காரர்களால் கடந்த காலங்களில் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை அடுத்தவாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

தொல்பொருள் திணைக்களபணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் ஜனாதிபதி மாளிகைக்கு ஏற்படுத்தப்பட்ட  சேதங்கள் தொடர்பான விரிவான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com