அறவிடப்படும் வருமான வரி வீதம் நிதி அமைச்சகத்தினால் வெளியீடு!

எதிர்வரும் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வருமானம் பெறும் வகைகளுக்கு ஏற்ப தனிநபர் வருமான வரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒரு இலட்சம் ரூபாய் வருமானத்திற்கு வரி இல்லை.

மேலும், 150,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 3500 ரூபாய் வரி, 200,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 10,500 ரூபாய் வரி, 250,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 21,000 ரூபாய் வரி, 300,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 35,000 ரூபாய் வரி, 350,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 52,500 ரூபாய் வரி, 400,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 70,500 ரூபாய் வரி,10 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 286,500 ரூபாய் வரி அறிவிடப்படவுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com