யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர்- அங்கஜனுக்கிடையில் முக்கிய சந்திப்பு!

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனுக்கும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

இல, 80ஏ கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள அங்கஜன் இராமநாதனனின் மாவட்ட அலுவலகத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, வடக்கு மாகாண மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் தற்கால பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துரைத்த அங்கஜன் இராமநாதன், இந்திய அரசாங்கம் எமது மக்களுக்கு ஆற்றிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், நாட்டின் வறுமை மிகுந்த மாவட்டங்களில் யாழ். மாவட்டமும் உள்ளடங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், எமது மாவட்ட மக்களுக்கான தேவைகள் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் மேலும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com