காபூலிலுள்ள ஹோட்டல் மீது துப்பாக்கி சூடு: மூன்று பேர் உயிரிழப்பு- ஐந்து சீன பிரஜைகள் உள்ளிட்ட பலர் காயம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

நேற்று (திங்கட்கிழமை) மதியம் 2:30 மணியளவில் காபூலின் வர்த்தக ஷார்-இ-நாவ் பகுதியில் உள்ள ஹோட்டல் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா மொஜாஹிட்டின் கூறுகையில், ‘மூன்று துப்பாக்கி ஏந்தியவர்களும் கொல்லப்பட்டனர் மற்றும் ஹோட்டல் விருந்தினர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்’ என கூறினார்.

வெளிநாட்டு பிரஜைகள் யாரும் கொல்லப்படவில்லை, ஆனால் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் கூரையில் இருந்து குதித்ததால் காயமடைந்தனர் என்று மொஜாஹிட் மேலும் கூறினார்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், காயமடைந்தவர்களில் ஐந்து சீன பிரஜைகளும் அடங்குவதாக தெரிவித்தார்.

காபூலில் உள்ள அவசரகால இலாப நோக்கற்ற நிறுவன தரவுகளின் படி, மருத்துவமனையில் 21பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சீனாவின் அரசு நடத்தும் சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

சீன விருந்தினர் மாளிகைக்கு அருகில் தாக்குதல் நடந்ததாகவும், காபூலில் உள்ள அதன் தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அது மேலும் கூறியது.

இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் செப்டம்பரில் ரஷ்ய தூதரகத்தின் அருகே தற்கொலை குண்டுவெடிப்பு உட்பட சமீபத்திய மாதங்களில் ஆப்கானிஸ்தானில் பல குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் இஸ்லாமிய அரசு என கூறிக்கொள்ளும் அமைப்பு உரிமை கோரியது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com