உணவு விநியோக நெருக்கடியில் பிரித்தானியா பராமுகமாக உள்ளது: தேசிய விவசாயிகள் சங்கம்!

உணவு விநியோக நெருக்கடியில் பிரித்தானியா தூக்கத்தில் உள்ளது என தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நெருக்கடியான இந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் தேசிய விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தக்காளி மற்றும் இதர பயிர்களின் விளைச்சல் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு குறையும் என தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

முட்டைகளில் ஏற்கனவே காணப்பட்டதைப் போல சாத்தியமான விநியோகப் பிரச்சனைகள் வரக்கூடும் என்று அது கூறியது.

அதிகரித்து வரும் எரிபொருள், உரம் மற்றும் தீவனச் செலவுகள் விவசாயிகளை கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. ஆனால், பிரித்தானியா அதிக மீள்திறன் கொண்ட உணவு விநியோகச் சங்கிலியைக் கொண்டுள்ளது என்று அரசாங்கம் கூறியது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com