இலங்கை சனத்தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் – ஐ.நா

உணவுப்பாதுகாப்பின்மை, அத்தியாவசியமான மருந்துகளிற்கு பற்றாக்குறை போன்ற பல காரணிகளால் இலங்கை நெருக்கடியை எதிர்கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐ.நா.வின் அலுவலகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய அலுவலகம் வெளியிட்ட தகவலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்டோபரில் உணவு பணவீக்கம் 85.6 வீதமாக காணப்படுவதால், சனத்தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் உணவுப் பாதுகாப்பு தொடர்ந்தும் பிரச்சினைக்குரியதாக காணப்படுவதால் பத்தில் மூன்று குடும்பங்கள் போதுமான உணவை உண்ணவில்லை எனவும் ஐநா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com