சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மீண்டும் திறக்க நடவடிக்கை?

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மீண்டும் திறக்க முடியும் என முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாடசாலைக் கல்வி மற்றும் உயர்கல்வி குறித்து நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இன்று நடந்தன.

அங்கு ஜனாதிபதி மற்றும் பல கட்சி-எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டனர்.

சைட்டம் சட்டபூர்வமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் தேவைப்பட்டால் மீண்டும் திறக்க முடியும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

உங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தால் மீண்டும் அதனை ஆரம்பிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும் நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க விருப்பம் தெரிவித்தனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com