லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரியின் மாணவர்கள் 17 பேர் இன்று (28) மதியம் 2.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் இருந்த வேளையில் அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவிக் கூடே இவ்வாறு கலைந்து வந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் ஆரம்ப பிரிவைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com