சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து – 10 பேர் பலி

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வடமேற்கில் உள்ள சின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி நகரில் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

 தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com