மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஓமான் தூதரக அதிகாரியின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து!

மனிதக்  கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஓமானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நபர் இலங்கை வந்தவுடன் உடனடியாக கைது செய்யப்பட்டு மனித கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படுவார் என்றும் எதிர்வரும் நாட்களில் அவர் இலங்கை திரும்புவார் என நம்புவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com