15 வயதான மாணவியை 11 தடவைகள் வன்புணர்ந்து, காட்சிகளை அதிபருக்கு அனுப்பிய இளைஞர் : மொரவக்க பிரதேசத்தில் சம்பவம்!

மொரவக்க பிரதேசத்தில் 15 வயதான  பாடசாலை மாணவி  ஒருவரை வன்புணர்ந்து அது தொடர்பான  நிர்வாணக் காணொளிகளை அதிபருக்கும் ஏனையவர்களுக்கும் வட்ஸ்அப்பில் அனுப்பியதாகக் கூறப்படும்  20 வயதுடைய ஒருவரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் நேற்று (24) கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர், மாணவியை  வீட்டில் வைத்து 11 தடவைகள் வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மாணவியின் பெற்றோர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறியபோது, சந்தேக நபர் அங்கு சென்று மாணவியை  பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், சந்தேக நபர் தனது கையடக்கத் தொலைபேசியில்  அந்தக் காட்சியை பதிவு செய்ததாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவியை  சிறுவர் இல்லத்துக்கு அனுப்பிவைத்துள்ள நிலையில் சந்தேக நபரை மொரவக்க  நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com