பா.ஜனதா கட்சி எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது- பி.கே.சேகர்பாபு

பா.ஜனதா கட்சி எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. ஒரு சைத்தான். இந்த ஆட்சியில் சைத்தான்களுக்கெல்லாம் வேலையில்லை. முதல் அமைச்சர் எப்படிப்பட்ட பேய்களையும், விரட்டக்கூடிய சக்தி படைத்தவர். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “விழித்துக்கொண்ட தமிழகத்தை இனி எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” என்று சொல்லி இருக்கின்றார். ஆகவே, தமிழக மக்கள் விழிப்போடு இருக்கின்றார்கள், பா.ஜ.க. போன்ற கட்சிகள் தமிழகத்தில் வேரூன்றுவதற்கு இடமே இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com