பங்களாதேஷில் ‘இந்தியன் ஓஷன் ரிம்’ மாநாடு இன்று – அலி சப்ரி தலைமையிலான குழு பங்கேற்பு!

இந்தியப் பெருங்கடல் எல்லையிலுள்ள நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம் பங்களாதேஷில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறுகிறது.

இந்தியன் ஓஷன் ரிம் (Indian Ocean Rim) என அழைக்கப்படும் இந்த அமைப்பில் இலங்கை உட்பட பிராந்தியத்தில் உள்ள 23 நாடுகள் உள்ளன

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று நேற்று நாட்டிலிருந்து புறப்பட்டு பங்களாதேஷிற்குச் சென்றுள்ளது.

இந்நிலையில், இன்று இடம்பெறவுள்ள மாநாட்டில் அமைச்சர் அலி சப்ரி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தப் பயணத்தின்போது, உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்  இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தவுள்ளார்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டு இந்த மாநாட்டின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com