தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீட்டுக்கு பாதுகாப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வு பிரிவினர் பெருமளவில் குவிந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உள்ள மாவீரர் நினைவிடத்தினை சிரமதானம் மூலம் துப்பரவு செய்ய இராணுவத்தினர் தடை விதித்தனர்.

இராணுவத்தின் தடைகளை மீறி துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, துப்பரவு பணிகளை மேற்கொண்டவர்களை இராணுவத்தினர் ஒளிப்படங்கள் எடுத்து, அச்சுறுத்தும் பாணியில் ஈடுபட்டதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com