மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது இளைஞன் மரணம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு எனும் பகுதியில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

பாலர்சேனையிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த துவிச்சக்கர வண்டியில் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பவளராசா சதுஷன் எனும் இளைஞன் மரணமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபரும், துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்த நபரும் படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் மரணமடைந்த இளைஞனின் சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீரின் கட்டளைக்கமைவாக பிரேத பரிசோதனைக்காக சடலத்தை கரடியனாறு பொலிசார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  கொண்டு சென்றுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com