இனந்தெரியாத விசமிகளினால் கெப் வண்டிக்கு தீ வைப்பு

புத்தளம் உடப்பு பகுதியில் வைரவநாதன் கேதீஸ்வரன் என்பவரின் கெப் வண்டிக்கு இனந்தெரியாத விசமிகளினால் தீவைக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (23) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் கெப் வண்டி பகுதியளவில் எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com