4,000 இலங்கை தாதியர்களுக்கு சிங்கப்பூரில் தொழில்வாய்ப்பு!

4,000 இலங்கை தாதியர்களை அடுத்த வருடம்  ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் ஆராய  சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் பத்து சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று நேற்று (22)  இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.   

20 வருடங்களின் பின்னர், சிங்கப்பூரில் உள்ள சுகாதாரத் துறைகளில்  இலங்கை தாதியர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் தொழிலாளர் மற்றும் நலன்புரித் தலைவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூர் சுகாதார அதிகாரிகள் குழு சிங்கப்பூரிலிருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SK-468 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com