இந்தோனேஷிய பூகம்பத்தினால் 262 பேர் பலி

இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது என உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரவித்துள்ளார்.

இப்பூகம்பத்தினால் 162 பேர் உயிரிழந்தனர் என நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது என சியான்ஜூர் நகர நிர்வாகத்தின் பேச்சாளர் ஆதம் இன்றுகூறியுள்ளார். 

ஜாவா தீவில் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சியான்ஜூர் நகருக்கு அருகில் 5.6 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்‍டிந்தது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com