ஜோ பைடனின் 80 ஆவது பிறந்த தினம் இன்று: புதிய சாதனை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் 80 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

அமெரிக்காவில் இதுவரை எவரும் 80 வயதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கவில்லை. 

2021 ஜனவரியில்  78 ஆவது வயதில் ஜனாதிபதியாக பதவியேற்றபோது, மிக அதிக வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக  பதவியேற்றவராக ஜோ பைடன் விளங்கினார்.

2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலிலும் ஜோ பைடன் வென்றால், அவர் 86 வயது வரை பதவியில் நீடிக்க முடியும்.  ஆனால், எதிர்வரும் தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு இன்னும் அவர் உறுதியாக பதிலளிக்கவில்லை. 

இதேவேளை, ஜோ பைடனின் பேத்தி (மகன் ஹன்டர் பைடனின் மகள்) நயோமி பைடனின் திருமணம் வெள்ளை மாளிகையில் நேற்று சனிக்கிழமை நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com