தீவிரவாதத்தை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது – ஜெய்சங்கர்

தீவிரவாதத்தை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு நிதியைத் தடுப்பது தொடர்பான மாநாட்டில் பேசியை பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளிடம் இழப்பீடு பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனை அடுத்து குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த எஸ்.ஜெய்சங்கர், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு கடுமையாக கண்டனம் வெளியிட்டார்.

மேலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஐ.நா.சபையில் தடை விதிக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சீனா முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com