அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக இ.தொ.கா தொழிற்சங்க நடவடிக்கை!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானிற்கும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் இடையிலான  கலந்துரையாடல்  ஹப்புத்தலையில் இன்று நடைப்பெற்றது.

இக்கலந்துரையாடலில் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் தொழில் புரியும் தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டது.

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனம் தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் கெடுபிடி நடவடிக்கைகளை  நிறுத்தாவிடின்  அந்நிறுவனத்தி்ற்கு எதிராக இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வரை ஊவா மாகாணத்தில் உள்ள அக்கரப்பத்தனை  பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் இருந்து ஒரு கிலோகிராம் தேயிலை கூட வெளியே செல்லாது என இ.தொ.கா தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com