
அதிவேகமாகச் சென்ற இரண்டு தனியார் பஸ்கள் மோதிக் கொண்டதில் இரு பஸ்களிலும் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (02) காலை 7.30 மணியளவில் ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி மிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.