
450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி ஒரு இறாத்தல் பாணின் விலையை இன்று (31) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.