மின் உற்பத்தி நிலையங்களை ரஷ்யா போர்க்களமாக மாற்றி வருகிறது – உக்ரேன் ஜனாதிபதி

உக்ரேனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்ய இராணுவம் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக உக்ரேனின் முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க ரஷ்யா ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருகின்றது. 

உக்ரேன் மின் நிலையங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை ரஷ்யா அழித்துள்ளது. இதனால் உக்ரேனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலில் நேற்று உரையாற்றினார். 

அப்போது அவர் தெரிவிக்கையில்,

“எங்கள் நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளை போர்க்களமாக மாற்ற ரஷ்ய தலைமை கட்டளையிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் விளைவுகள் ஐரோப்பாவில் உள்ள நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தானவை. உக்ரேனில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு, மின்சாரம் மற்றும் குளிர்காலத்தை சாமாளிப்பது தொடர்பான பிரச்சினைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ரஷ்யா தாக்குதல்களை தொடுத்துள்ளது. எரிசக்தி கட்டமைப்புகள் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல்கள் அதிகமானதால், ஏராளமான உக்ரேனியர்கள் ஐரோப்பா நோக்கி செல்கின்றனர் என்றார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com