குறித்த சாதியினர் மட்டுமே திலீபனை நினைவுகூரலாம் – மணிவண்ணன் ஆதரவாளர்கள் கிழப்பும் புதுப்பிரச்சனை!

தியாகதீபத்தின் 35வது வருட நினைவேந்தல்கள் நல்லூரில் உள்ள தியாகதீபத்தின் நினைவுத்தூபியில் நடைபெற்று வருகின்றது. 11வது நாளான இன்று திடிரென பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் அவ்விடத்திற்கு வந்த சிலர் அங்கு பந்தல்களை அமைத்து அதற்குள் அமர்ந்திருந்தனர். அந்நிலையில் இன்று மாலை வேளையில் அவர்களில் சிலர் தியாகதீபத்தின் நினைவிடத்தில் ஏறிநின்று அருகில் நின்றிருந்த ஏற்பாட்டுக்குழுவினரைப் பார்த்து உங்களுக்கெல்லாம் இங்கே வர என்ன தகுதி இருக்கின்றது? என சாதிய ரீதியாக மிகக்கேவலமாக வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

தியாகதீபத்தின் 01ம் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகளின் போதும் இந்த பத்மநாதன் என்ற நபர் அங்கிருந்தவர்களைப் பார்த்து இவ்வாறான சாதிய ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தார். அதன்பின்னரான குழப்பங்களையடுத்து அவர் அதற்காக மன்னிப்புக் கோரியிருந்த நிலையில் மீண்டும் இன்று இவ்வாறான செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்த பத்மநாதன் என்ற நபர் மூத்த போராளி பசீர் காக்காவின் சகலன் முறை உறவினராவார். அத்துடன் இவர் மணிவண்ணனின் செயலாளராக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தியாகதீபத்தின் நினைவேந்தல்கள் சுமூகமாக நடைபெற்றுவரும் நிலையில் அதைக்குழப்புவதற்காக பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் சிலர் செயற்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் நள்ளிரவு அப்பகுதிக்கு மதுபோதையில் வந்த சிலர் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்றைய தினம் மாலையிலும் சிலர் அங்கு வந்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், இவ்வாறான சாதிய ரீதியான தாக்குதல்களும் அங்கு நடைபெற்றுள்ளது.

கீழேயுள்ள இணைப்பை அழுத்தி கானொளியை பார்வையிடலாம்.

https://www.youtube.com/shorts/YmhtzaIpVAI

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com