தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் மதுபோதையில் வந்த மணிவண்ணனின் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

சற்றுமுன்னர் நல்லூரில் உள்ள தியாகதீபத்தின் நினைவிடத்தில் நின்றவர்கள் மீது மணிவண்ணனால் அழைத்துவரப்பட்ட மதுபோதையில் வந்த நபர்களால் தாக்குதல் முயற்சியொன்று நடைபெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் மதுபோதையில் வந்த சிலர் நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்குவதற்கு முயற்சித்துள்ளனர். அதேவேளை மோட்டார்சைக்கிளில் வந்த இன்னுமொருவர் நினைவிடத்திற்கு வெளியே வீதியில் நின்றவர்களை வெளிநாட்டிலிருந்து எவ்வளவு காசு வந்தது? என தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்கள்.

நேற்று நள்ளிரவு நேரமும் தியாகதீபத்தின் நினைவிடத்திற்கு மோட்டார்சைக்கிளொன்றில் மதுபோதையில் வந்த மூவர் குழப்பம் விளைவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தியாகதீபத்தின் 35வது வருட நினைவேந்தல்கள் அமைதியாக நடைபெற்றுவரும் நிலையில், பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் வரும் சிலர் அங்கு மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொள்ளும் செயற்பாடுகள் அங்கிருக்கும் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com