கொரோனாவை பழித்த பிரேஷில் ஜனாதிபதிக்கு கொரோனா!

பிரேஷில் ஜனாதிபதி ஜய்ர் பொல்சனரோவுக்கு (65-வயது) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை உட்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வெறும் சிறிய காய்ச்சல் மட்டுமே என்று பொல்சனரோ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.